மேலும் செய்திகள்
கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகம்!
13-Jan-2025
கோவை; காளப்பட்டி, நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, கோவை மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில், சிறந்த கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த, விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில், முக்கிய பங்காற்றியதற்காக, இந்த அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.சுகுணா குழும தலைவர் லக் ஷ்மி நாராயணசாமி, தாளாளர் சுகுணாலக் ஷ்மி ஆகியோர், பேராசிரியர் ஷோபிதா மற்றும் மாணவர்களை பாராட்டி கவுரவித்தனர். செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர், கல்லுாரி முதல்வர் ராஜ்குமார் ஆகியோரும் வாழ்த்தினர்.
13-Jan-2025