உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலுாரில் உருவாகிறது மற்றொரு ‘வெள்ளலுார்’

வெள்ளலுாரில் உருவாகிறது மற்றொரு ‘வெள்ளலுார்’

கோவை: வெள்ளலுார் பேரூராட்சிக்குட்பட்ட பல பொது இடங்களில் குப்பை கொட்டப்படுகின்றன. குப்பையில் அடிக்கடி யாரோ தீ வைத்து விடுவதால், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. குப்பை தொட்டிகள் இல்லா கோவை வரவேற்கத்தக்கது. ஆனால் இன்னும் குப்பையை தரம் பிரித்து வழங்காத சிலர், அவற்றை ரோட்டோரம் கொட்டுவது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. சக்தி ஈஸ்வர் நகரில், தனியார் பள்ளிக்கு அருகில் உள்ள ரோட்டில் அதிக குப்பை கொட்டுகின்றனர். பிளாஸ்டிக் கலந்த குப்பையை மாடுகள் உண்பதால், உடல்நல கோளாறு ஏற்படுகிறது. ஏற்கனவே வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னை புகைந்து வருவதால், இது போன்று வேறு இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை