உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணை பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

துணை பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

கோவை; வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மேட்டுப்பாளையம் துணை பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம், நந்தனவனம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. மேட்டுப்பாளையம் துணை பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு துணை பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த, 2019 முதல், 2024ம் ஆண்டு வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், தன் மனைவி மற்றும் உறவினர் பெயரிலும் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி கே.கே.புதுாரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !