உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான்; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான்; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

கோவை; போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் போட்டிகளில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கோவை விழாவின் 17வது பதிப்பு, நவ., 24 முதல் டிச., 1 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை விழா மராத்தான் நேற்று நடந்தது. இந்தாண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மராத்தானை துவக்கி வைத்து பங்கேற்றார். போட்டிகளில், 2,500 பேர் பங்கேற்றனர்.போட்டி துவங்கும் முன், பங்கேற்பாளர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேமிலி ரன், 2.5 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும், 15 கி.மீ., ஆகிய துாரங்கள் போட்டிகளில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், ரூ.3.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மராத்தானை 'தினமலர்' நாளிதழ் இணைந்து வழங்கியது. போட்டிகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை