உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மேட்டுப்பாளையம்; கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உத்திரவின்படி, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் தலைமையில் கோவை சாலை, உதகை சாலை, அன்னூர் சாலை, சத்தியமங்கலம் சாலை என நான்கு முக்கிய சாலைகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் 'ஒழிப்போம் ஒழிப்போம் போதை பொருள் ஒழிப்போம்' 'படைப்போம் படைப்போம் போதையில்லாத சமுதாயம் படைப்போம்' என முழக்கமிட்டவாறு சென்றனர். அவர்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி