மேலும் செய்திகள்
ஊர்க்காவல் மண்டல தளபதி விண்ணப்பங்கள் வரவேற்பு
31-Jan-2025
கோவை; கோவை மாவட்ட போலீசின் கீழ் உள்ள, ஊர்க்காவல் படையில் ஏரியா கமாண்டர் மற்றும் துணை ஏரியா கமாண்டர் பதவிகளில் சேர்ந்து, சேவையாற்ற விரும்புவோருக்காக தேர்வு, வரும் 28ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது.இது தொடர்பாக, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏரியா கமாண்டர் மற்றும் துணை ஏரியா கமாண்டர் பதவிகளுக்கு, பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள், 21 முதல் 50 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு கவுரவ பதவி என்பதால், ஊதியம் வழங்கப்பட மாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், ஊர்க்காவல் படையில் சேர்ந்து, சேவையாற்ற செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தினை சுய விவரக் குறிப்புடன், நேரடியாக கோவை மாவட்ட காவல் அலுவலகத்திலோ அல்லது காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம் என்ற முகவரிக்கோ நாளை இரவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31-Jan-2025