உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பஸ் ஊழியர்கள் நியமனம்

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பஸ் ஊழியர்கள் நியமனம்

பொள்ளாச்சி, ;அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி கிளை 1, 2 மற்றும் 3ல், 36 கண்டக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், கோவை, ஊட்டி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இங்கு, 'பர்ஸ்ட் அண்டு பெஸ்ட் சர்வீஸஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக 148 டிரைவர்கள், 245 கண்டக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவ்வகையில், ஒரு ஷிப்டுக்கு, (8 மணி நேரப்பணி) ஜி.எஸ்.டி., நீங்கலாக டிரைவருக்கு, 1,041 ரூபாய், கண்டக்டருக்கு, 1,030 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு, நேர்காணல் கடந்த மாதம், கோவையில் நடந்தது.இது குறித்து, அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:நேர்காணல் வாயிலாக, மருதமலை கிளையில் - 18 கண்டக்டர்கள், சூலுார் - 14 டிரைவர்கள், 17 கண்டக்டர்கள், ஒண்டிப்புதுார் - 23 டிரைவர்கள், 22 கண்டக்டர்கள், கருமத்தம்பட்டி - 21 டிரைவர்கள், 17 கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல, அன்னுார் - 13 கண்டக்டர்கள், மேட்டுப்பாளையம் கிளை 1 - 5 கண்டக்டர்கள், தலைமை அலுவலகம் - 22 டிரைவர்கள், 17 கண்டக்டர்கள், சுங்கம் கிளை 1 - 28 டிரைவர்கள், 20 கண்டக்டர்கள், சுங்கம் கிளை 2 - 24 டிரைவர்கள், 17 கண்டக்டர்கள், உக்கடம் கிளை 1 - 16 டிரைவர்கள், 7 கண்டக்டர்கள், உக்கடம் கிளை 2 - 16 கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.மேலும், பொள்ளாச்சி கிளை 1 - 22 கண்டக்டர்கள், பொள்ளாச்சி கிளை 2 - 11 கண்டக்டர்கள், பொள்ளாச்சி கிளை 3 - 3 கண்டக்டர்கள், வால்பாறை - 7 கண்டக்டர்கள், மேட்டுப்பாளையம் கிளை 2 - 10 கண்டக்டர்கள், பல்லடம் - 23 கண்டக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை