மழை பெற்று தந்த பாராட்டு மழை!
கோவை : சமீபத்தில் பெய்த கனமழையின் போது, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.கோவை மாநகர போலீசார் சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக கண்காணிக்க வேண்டிய இடங்கள் குறித்து செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி மழை பெய்த போது, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. அப்போது பொது மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை சரி செய்ய, போலீசார் கடுமையாக பணியாற்றினர்.அதில், சிறப்பாக செயல்பட்ட, 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 போலீசாரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டி, நேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவர்களின் பணி புத்தகத்தில் நற்பணிபதிவு செய்யவும் உத்தரவிட்டார்.