உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளக்ஸ் பேனர் வைத்து மீண்டும் அத்துமீறல்; அதிகாரிகள் கண்ணுக்கு தெரியலையா?

பிளக்ஸ் பேனர் வைத்து மீண்டும் அத்துமீறல்; அதிகாரிகள் கண்ணுக்கு தெரியலையா?

வால்பாறை; வால்பாறையில், காந்திசிலை வளாகத்தில் பிளக்ஸ் வைக்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.வால்பாறையில், பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெறும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பிறந்த நாள் விழா, கட்சி விழாக்களுக்கு ரோட்டில் அத்துமீறி பிளக்ஸ் வைக்கபட்டுள்ளது. குறிப்பாக, புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் போஸ்ட் ஆபீஸ் வரையிலும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு பிளக்ஸ் வைத்துள்ளனர்.இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதோடு, ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. காந்திசிலை வளாகம், அண்ணாசிலை வளாகம், ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் விதிமீறி பிளக்ஸ் வைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில், அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிளக்ஸ் வைக்கின்றனர். குறிப்பாக, காந்தி சிலையை மறைத்து பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளன. வால்பாறையில் காற்று வேகமாக வீசும் நிலையில், இது போன்ற பிளக்ஸ் போர்டுகள் சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பிளக்ஸ் வைக்க வேண்டுமானால், நகராட்சி, போலீசில் தடையின்மை சான்று பெற்று, அதற்கான கட்டணம் செலுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றாலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிளகஸ் வைக்கக்கூடாது.ஆனால், வால்பாறையில் பிளக்ஸ் வைக்க யாரும், யாரிடமும் அனுமதி பெறுவதில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தான் பிளக்ஸ் வைக்கின்றனர். ஓட்டு கேட்டு வரும் போது மட்டும் மக்கள் மீது அக்கறை இருப்பது போன்று பேசுகின்றனர். உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால், இதுபோன்று விதிமீறி பிளக்ஸ் வைக்க மாட்டார்கள்.அரசியல் கட்சியினரை கண்டு அதிகாரிகளுக்கு பயம். அதனால், நகராட்சி, போலீஸ் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். தொடர்ந்து வீதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு அபராதம் விதித்து, சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற அத்துமீறலை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி