உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் நாளை கவுன்சிலிங் ஆவணங்கள் தயாராக இருக்கிறதா?

அரசு கல்லுாரியில் நாளை கவுன்சிலிங் ஆவணங்கள் தயாராக இருக்கிறதா?

கோவை : கோவை அரசு கலைக் கல்லுாரியில் சேர 18 ஆயிரத்து, 925 மாணவர்கள், 14 ஆயிரத்து, 828 மாணவியர் என, மொத்தம், 33 ஆயிரத்து, 753 பேர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.நாளை சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. வரும், 4ம் தேதி பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. காலை 9:00 மணி முதல் கவுன்சிலிங் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும், 4ம் தேதி தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசையில், 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.வரும் 5ம் தேதி தமிழ், ஆங்கில பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது. தமிழ் பாடத்துக்கான கவுன்சிலிங்கில், தரவரிசையில் 75 மற்றும் அதற்கு மேல், மதிப்பெண் பெற்றவர்கள், ஆங்கிலப்பாடத்துக்கான கவுன்சிலிங்கில், தரவரிசையில், 60 அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.காலியிடங்களை பொறுத்து, பிற மாணவர்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள்?

கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், சிறப்பு பிரிவுக்கான சான்றிதழ்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கவுன்சிலிங் அழைப்பு கடிதம், 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும், இரு நகல்களுடன் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ