வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுக்கு ஏன் சிரமப்படணும்? திமுக வினர் நடத்தும் மருத்துவமனையில் சொன்னால் அவர்கள் சிறுநீரகத்தை திருடியது மாதிரி கண்ணை திருடி தந்து விடுவார்கள்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களில், 60 பேர் கண் தானம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகமாகவில்லை என்பதால் கண்மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். மருத்துவமனையில் மரணம் அடைபவர்களின் விழிகளை தானம் செய்தால், உடனடியாக அக்கண்களை அகற்றி, தேவையான நபருக்கு பொருத்தி பார்வை அளிக்க முடியும். இது எளிமையான உறுப்பு தானம் என்பதால், பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளியின் குடும்பத்தினர் தயக்கம் இல்லாமல் தாமாக முன்வந்து கண் தான பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கிறார்கள். கண்ணின் முக்கிய பகுதியான, கார்னியா என்கிற கருவிழி படலம் பாதிக்கப்பட்டால், ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடைபடும். விழித்திரையில் பிம்பம் படியாமல், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக அல்லது பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. சீரற்ற கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, தானமாக பெறும் கார்னியாவை பொருத்தக்கூடிய கண் மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சுலபமானது, பரவலானது. தமிழகத்தில் 2021ல் 5422 பேர் கண் தானம் செய்தனர். 2023-24ல் இந்த எண்ணிக்கை 9,400 ஆக உயர்ந்தது. இது மோசமில்லை என்றாலும், உறுப்பு தானத்தில் நாட்டில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், மாதம் 600 பேர் மரணம் அடையும் நிலையில், அதில் 20 சதவீதம் பேர் மட்டுமே கண் தானம் செய்கின்றனர். கடந்த ஆண்டில், 120 பேர் மட்டுமே கண் தானம் செய்துள்ளனர். அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு தலைவர் சாந்தி கூறுகையில், ''கண் தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இந்த ஆண்டில் ஜூலை வரை 60 பேர் தான் கண் தானம் செய்துள்ளனர். தேவை அதிகம் உள்ளதால், அதிகமானவர்கள் கண்தானத்துக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றார். கண் தானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் https://tnehms.tn.gov.in/e-services/ என்ற அரசு இணையதளத்தில் பதிவுகளை மேற் கொள்ளலாம்.
இதுக்கு ஏன் சிரமப்படணும்? திமுக வினர் நடத்தும் மருத்துவமனையில் சொன்னால் அவர்கள் சிறுநீரகத்தை திருடியது மாதிரி கண்ணை திருடி தந்து விடுவார்கள்.