ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியா இருக்கா; கலெக்டர் ஆய்வு
கோவை; கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திலுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் படி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இதன்படி, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய 17,421 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்று, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தெற்கு தாலுகா அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு வைப்பறை திறக்கப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் செந்தில் வடிவு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.