கோவையில் டெங்கு, மலேரியா கொசு இருக்கா? ராத்திரி, பகலாக மண்டல பூச்சியியல் பிரிவினர் ஆய்வு
கோவை; கோவையில் டெங்கு, மலேரியா பரப்பும் கொசுக்கள் இருக்கிறதா என, மண்டல மற்றும் மாவட்ட மண்டல பூச்சியியல் பிரிவு களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். 'பிளாஸ்மோடியம்' ஒட்டு ண்ணி 'அனாபெலஸ்' பெண் கொசு வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது, ஒரு வரை கடிப்பதன் மூலம் மலே ரியா பரவுகிறது. அதேபோல், ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் கடிப்பதால், டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. உலக கொசு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சுகாதாரத்துறை சார்பில் மண்டல பூச்சியியல் துறை வல்லுநர்கள், களப்பணியாளர்கள், திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கல்லுாரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வல்லுநர்கள் பகுதி வாரியாக சென்று, அப்பகுதியில் உள்ள கொசுப்புழுக்கள், முதிர் கொசுக்களின் அடர்த்தி போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். வைரஸ் பரப்பும் கொசுக்கள் கண்டறியப்பட்டால், அப்பகுதிகளை சுற்றி, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கோவை மண்டல பூச்சியியல் துறை வல்லுநர் சாந்தி கூறுகையில், ''தண்ணீர் சேகரிக்கும் பொருட்கள் எதுவானாலும், வாரம் ஒரு முறை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். டெங்கு, மலேரியா பரப்பும் கொசுக்களை பிடித்து ஆய்வு செய்கிறோம். வைரஸ் பரப்பும் கொசுக்கள், முட்டை புழுக்கள் கண்டறிந்தால் உடனடியாக அழிக்கப்படுகிறது. மலேரியா ப ரப்பும் கொசுக்கள் உள்ளதா என்பதை, மாலை, 6:00 முதல் காலை, 6:00 மணி வரை சென்றும், டெங்கு பரப்பும் கொசுக்கள் உள்ளதா என்பதை பகலிலும் ஆய்வு செய்வோம். கோவையில் மலேரியா பாதிப்புக்கான பகுதி இல்லை; ஈரோட்டில் ஒரு பகுதி மட்டும் கண் காணிப்பு பட்டியலில் உள்ளது, '' என்றார். நேற்று உலக கொசு ஒழிப்பு தினம்!
'சுய வைத்தியம் கூடாது'
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டியது அவசியம். குடிநீர் சேகரிக்கும் அனைத்து வகை பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். கொசு முட்டையிட்டால் அதிலும் டெங்கு வைரஸ் இருக்கும். பகல் நேரத்தில் கடிக்கும் இக்கொசு ,கருப்பு நிறத்தில் வரி வரியாக வெள்ளை நிறக்கோடுடன் இருக்கும். காய்ச்சல் வந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் அறிகுறியுடன் வருவோருக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு உட்பட ஐந்து வகையான பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்போம்,'' என்றார்.