தாயிடம் தகராறு ; பெண் மீது தாக்குதல்
கோவை; தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கவுண்டம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் நாகலட்சுமி, 25; அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் பணியாற்றி வருகிறார். அவருடன் கண்ணப்ப நகரை சேர்ந்த நாகூர் அம்மா என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி நாகலட்சுமி மற்றும் நாகூர் அம்மா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மில்லில் பணியாற்றுவோர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.கடந்த, 27ம் தேதி, நாகலட்சுமி வேலைக்கு சென்ற போது, மில்லின் கேட் அருகில் நாகூர் அம்மா மற்றும் அவரது மகன் முகமது ராஜா, 22 ஆகியோர் காத்திருந்தனர்.அங்கு வந்த நாகலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி ராஜா தாக்கி, கீழே தள்ளி விட்டார்.சம்பவம் குறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.