அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா
தொண்டாமுத்துார் தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், கலைத்திருவிழா நேற்று துவங்கியது. 32 விதமான போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டிக்கும் அந்தந்த துறை வல்லுனர்கள் நடுவராக பங்கேற்பர். இதன் துவக்க விழா, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். நேற்று சிறுகதை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி நடந்தது. கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.