வாழும் கலையின் யோகா வகுப்பு இன்று துவக்கம்
அன்னுார்,;அன்னுாரில் வாழும் கலை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ரவிசங்கர் வடிவமைத்த ஆனந்த அனுபவ அறிமுக வகுப்பு இன்று துவங்குகிறது. இன்று (11ம் தேதி) மாலை 6:30 மணிக்கு, அன்னுார், தென்னம்பாளையம் சாலையில், செல்வி ஸ்பின்னிங் வளாகத்தில் உள்ள வாழும் கலை பயிற்சி மையத்தில் இலவச அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, பயிற்சி வகுப்பு 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், சுதர்சன கிரியா ஆகியவை கற்பிக்கப்படும். இப்பயிற்சி பெறுவதால் ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், ஆனந்தமான வாழ்க்கை அமையும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம். 'மேலும் விவரங்களை 97877 35359 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்