மேலும் செய்திகள்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
02-Sep-2025
மேட்டுப்பாளையம்; காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் பயனாளிகளுடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் 2024--25 கீழ் 363 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு மேற்படி 363 வீடுகளில், 326 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு இறுதி தொகை விடுவிக்கப்பட்டு பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் கனவு இல்லம் வீடுகளில் கான்கிரீட் கூரை போடப்பட்டு, பூச்சு மற்றும் கதவு ஜன்னல்கள் முடிக்கப்படாத 37 வீடுகளின் பயனாளிகளுடன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவர் சீனிவாசன் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகள் அனைவரும் விரைவில் பணிகளை முடித்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவாதம் அளித்தனர்.---
02-Sep-2025