உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 65 சதவீத பள்ளிகளில் கலைத்திருவிழா நிறைவு

65 சதவீத பள்ளிகளில் கலைத்திருவிழா நிறைவு

கோவை; கோவையில் 65 சதவீத பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் போட்டிகளை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வி சாரா திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், கலைத்திருவிழா போட்டிகள் 2022-2023 கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்களின் விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்ததையடுத்து, சி.இ.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான வழிமுறைகள் கூறப்பட்டன. தற்போது, 65 சதவீத பள்ளிகளில் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் திறமையையும் வெளிக்கொணரும் நோக்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி அளவிலான போட்டிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறுவதால், மாணவர்களின் கற்றல் அடைவில் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை