வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாக்டர் கொள்ளை காசு பார்த்தால் புகார் கூறலாமா
கோவை: ''மருந்துகளை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்,'' என, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து அறிவுறுத்தியுள்ளார். கோவை மண்டல மருந்து கட்டுப்பாடுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது: பொதுமக்கள் மருந்துகள் வாங்கும் போது, கட்டாயம் டாக்டர் பரிந்துரை சீட்டு கொடுத்து வாங்க வேண்டும். வாங்கும் மருந்துகள் டாக்டர் பரிந்துரைத்தது தானா என்பதை, வாங்கிய பின் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். காலாவதி தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். வழக்கமாக, காலாவதி மருந்துகளை தனியாக வைத்து பராமரிக்க, மருந்தகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சில நேரங்களில் தவறுதலாகவும் காலாவதி மருந்துகள், நம் கைகளுக்கு வர வாய்ப்புண்டு. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.சுயமாக மருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும். நோயின் தன்மை, நபரின் உடல் பிரச்னைகள், எடை, போன்றவற்றை பொறுத்தே, மருந்தின் 'டோஸ் தீர்மானிக்கின்றனர். அதே போன்று, குறிப்பிடப்படும் கால அளவில், குறிப்பிடும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு ஒரு நோய்க்காக வாங்கிய மருந்தை, இந்தாண்டு அதே நோய் வரும்போது சாப்பிடக்கூடாது.மருந்துகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிலும், ஒரு அட்டை வாங்கினால், ஒன்று இலவசம் போன்ற விளம்பரங்களை நம்பி, அறிமுகம் இல்லாத நபர்களிடம் வாங்கக்கூடாது. எம்.ஆர்.பி., விலைக்கு மேல் மருந்து விற்றாலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
டாக்டர் கொள்ளை காசு பார்த்தால் புகார் கூறலாமா