ஆர்.கே., நகர் பள்ளியில் வானியல் உலா நிகழ்ச்சி
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி அருகே, ஆர்.கே., நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், வானியல் உலா நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய வானியல் உலா நிகழ்ச்சி ஜோதி நகர் நகராட்சி பூங்காவில் நடந்தது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரக் கல்வி அலுவலர் பூம்பாவை, ஆர்.கே., நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, ஆசிரியர் பயிற்றுநர் பாக்கியலட்சுமி மற்றும் நகராட்சி துணை தலைவர் கவுதமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், அடுத்தடுத்து வரிசையாக வலம் வந்த ஜூபிடர் உட்பட பல கோள்கள் மற்றும் சந்திரன் ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் கண்டு களித்தனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கோள்களின் இயக்கம் குறித்து விளக்கினர்.