உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை கால பயிற்சி முகாமில் தடகள வீரர்கள் அபாரம்

கோடை கால பயிற்சி முகாமில் தடகள வீரர்கள் அபாரம்

கோவை; கோவை அதலெடிக் கிளப் சார்பில், 24வது கோடை கால தடகள பயிற்சி முகாம் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. 200க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், எட்டு வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, 50 மீ., ஓட்டத்தில் யுவஹர்சன், பிரஹித், குங்கும இளமாறன் ஆகியோரும், 75 மீ., ஓட்டத்தில் யுவஹர்சன், பிரித்வின் ஆர்யா, ஜெபரி ஸ்டீபன் சிங் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வீராங்கனைகளுக்கான, 50 மீ., ஓட்டத்தில், நிகாரிகா மைதிவா, கனிசா ஸ்ரீ, ரித்திகா ஆகியோரும், 75 மீ., ஓட்டத்தில் நிகாரிகா மைதிவா, கனிஷ்கா, நிதிஷ்கா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நிறைவில், வீரர்கள் பிரிவில் யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி, 131 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.வீராங்கனைகள் பிரிவில், ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளி அணி, 98 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ