உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடகளத்தில் தடை தாண்டி வீரர், வீராங்கனைகள் வெற்றி

தடகளத்தில் தடை தாண்டி வீரர், வீராங்கனைகள் வெற்றி

கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடந்துவருகின்றன. கோவை நேரு ஸ்டேடியத்தில் மேற்கு குறுமைய போட்டிகள் நடக்கின்றன. இதில், 14 வயதுக்குட்ப ட்ட மாணவியருக்கான, 100 மீ., ஓட்டத்தில், சர்ஜனாஸ்ரீ, சனுஸ்ரீ, சாய்ரிதா ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் லாவண்யா, அஷ்விகா, சர்ஜனாஸ்ரீ ஆகியோரும், 600 மீ., ஓட்டத்தில் சுபர்னா, அல்ஹனா, பூர்விகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 80 மீ., தடை தாண்டுதலில் பிரணிதா, ஆர்திரா பிரதாப், யாஷினி ஆகியோரும், உயரம் தாண்டுதலில் சஞ்சனா, தமிழினி, தீபனாஸ்ரீ, நீளம் தாண்டுதலில் நிதர்சனா, தக்ஷதா, லாவண்யா, குண்டு எறிதலில் ஹனிசா, மதுவந்திகா, ஆர்த்தி ஆகியோரும், முதல் மூன்று இடங்களை வென்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் பிரணவ், சூர்யா, விஷ்ணு பிரசாந்த் ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் கமலகண்ணன், சுஜித்குமார், கவுதம், 600 மீ., ஓட்டத்தில் கமலகண்ணன், சுஜித்குமார், பிரதீக் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதலில் பாலகார்த்திகேயன், பிரணவ், தர்சன் ஆகியோரும், வட்டு எறிதலில் ஹர்திக், கார்த்திக்ஸ்ரீ, குருபர செல்வம் ஆகியோரும், முதல் மூன்று இடங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ