மேலும் செய்திகள்
போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் பாதிப்பு
07-Feb-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடைக்கு, முறையாக டவுன் பஸ்கள் இயக்கப்படுவதை துறை ரீதியான அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடைக்கு, 12/34, 34 பி,சி (தம்பம்பதி), 34, 34 ஏ (சர்க்கார்பதி) ஆகிய வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, 4 நான்கு தனியார் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.இதில், 34 எண் கொண்ட அரசு பஸ் மட்டுமே 'பீக் ஹவர்சில்' இயக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், இந்த பஸ் அவ்வப்போது முறையாக இயக்கப்படுவதில்லை என, சேத்துமடை பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மக்கள் கூறியதாவது:டவுன் பஸ்களை நம்பியே, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். ஆனால், 'பீக் ஹவரில்' இயக்கப்படும், 34 எண் கொண்ட பஸ், திடீரென நிறுத்தப்படுகிறது.அதேபோல, இந்த வழித்தடத்திற்காக ஒதுக்கப்பட்ட பஸ்சும் இயக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, மாற்று பஸ் இயக்கப்படுவதால் சில நேரங்களில் 'மக்கர்' ஆகி நடுவழியில் நின்று விடுகிறது. அப்போதும் பயணிகள் பாதிப்படைகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி, அரசு பஸ்களின் இயக்கத்தை முறைபடுத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில், காலம் தாழ்த்தாமல் பஸ் சென்றடைவதை துறை ரீதியான அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
07-Feb-2025