உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பற்றியெரிகிறது ஆட்டோ டிரைவர் தீக்குளித்த விவகாரம்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

பற்றியெரிகிறது ஆட்டோ டிரைவர் தீக்குளித்த விவகாரம்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் தலைமை வகித்தார்.n இந்து மக்கள் புரட்சி படை மாநில தலைவர் பீமா பாண்டி தலைமையில், நிர்வாகிகள் கையில் ஒரு பெரிய தூணுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், 'கோவையில் 1998ம் ஆண்டு பிப்., மாதம் 14ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்நாளை, கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தாரில், தகுதி உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்களின் நினைவாக, கோவையில் நினைவு தூண் அமைக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.n பாரத் சேனா அமைப்பு மாநில தலைவர் செந்தில் கண்ணன், கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். அவர் அளித்த மனுவில், 'பாரத் சேனா கோவை வடக்கு மாவட்ட செயலாளராக, ஆட்டோ டிரைவர் சேகர் இருந்தார். அவரது ஆட்டோ ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக, பாரத் சேனா பெயர் பலகை உள்ளது. கவுண்டம்பாளையம் போலீசார் அந்த பலகையை அகற்றுமாறு கூறியுள்ளனர். ஜன., 31ல் சேகரின் மகன் மணி பாரத்தை கவுண்டம்பாளையம் போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். மகன் மீது பொய் வழக்கு போட்டதால், மன வேதனை அடைந்த அவர், போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்து உயிரிழந்தார். ஆட்டோ ஸ்டாண்டில் பெயர் பலகை அகற்றாததால் சேகரின் மகனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். எனவே சேகரின் மரணத்துக்கு காரணமான அதிகாரி மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.n சிக்கத்தாசம்பாளையம் ஊராட்சியை, மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், காரமடை ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் மக்கள் கூலி வேலை, விவசாயம் செய்கின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைத்தால், வாழ்வாதாரம் பாதிக்கும். ஊராட்சியாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இது தவிர, வீட்டுமனைப்பட்டா, நில அளவை, ஜாதிச்சான்று, வருமானச்சான்று தொடர்பான ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ