உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கணும்!

 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கணும்!

வால்பாறை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்குள்ள வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும்கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆழியாறிலிருந்து மலைப்பாதையில் வால்பாறை வருவோர், உணவுப்பொருட்களோடு பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதியில் வீசுகின்றனர். இதனால், சுற்றுச்சூழலும், வனவிலங்குகளும் பாதிக்கின்றன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறைக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆழியாறு மற்றும் சோலையாறு ஆகிய வனத்துறை சோதனை சாவடிகளில், சுற்றுலா பயணியர் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனாலும், வால்பாறை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வழங்குகின்றனர். இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி