மேலும் செய்திகள்
நம்பிக்'கை' முடங்காது இனி
03-Dec-2024
கோவை : உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், கலைவிழா மற்றும் விருது வழங்கும் விழா, கோவை தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பஞ்சாபி அசோசியேஷன் அரங்கில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் சிம்மச்சந்திரன் தலைமை வகித்தார்.இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கன்னியப்பன் கூறுகையில், ''கோவை மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கலை விழா நடத்தி வருகிறோம்.இந்த ஆண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த, 15 பேருக்கு விருது வழங்கி இருக்கிறோம். 40 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
03-Dec-2024