உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரைநோய் மருத்துவர் பாலமுருகனுக்கு விருது

சர்க்கரைநோய் மருத்துவர் பாலமுருகனுக்கு விருது

கோவை; தமிழ்நாடு இந்திய மருத்துவச் சங்கம் சார்பில், மருத்துவர் தின விழா மற்றும் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, தாம்பரம் ஐ.எம்.ஏ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.தமிழ்நாடு இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, கிராமப்புற மருத்துவச் சேவைத் துறையின் இயக்குனர் ராஜமூர்த்தி பங்கேற்றார்.இதில், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு, சிறந்த மக்கள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டாக்டர் பாலமுருகன், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்தி சேவை புரிந்ததற்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவச் சங்கமாநில செயலர் கார்த்திக் பிரபு,டாக்டர்கள் அபுல்ஹாசன், ஸ்ரீதர் உள்பட 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை