தமிழ் சங்க மூத்த உறுப்பினர்களுக்கு விருது
மேட்டுப்பாளையம்; தமிழ் சங்கத்தில், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு, விருது வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின், 52ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், தமிழ் சங்க அறக்கட்டளை அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ் சங்க தலைவர் சோலைமலை தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தாமோதரன் வரவேற்றார். ரங்கசாமி தமிழ் சங்க ஆண்டறிக்கை வாசித்தார். பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். தமிழ் சங்கத்தில், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்கள், 12 பேருக்கு, பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் வீரபத்திரன், ராமசாமி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.