மேலும் செய்திகள்
புதுமை கற்பித்தல் வெற்றிகளைக் கொண்டாடுங்கள்
25-Sep-2025
கோவை: நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் குழு உள் புகார்கள் குழு (ஐ.சி.சி.,), ஆகியவை இணைந்து நடத்தின. கோவை நகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சூரியமூர்த்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பு, உரிமைகள், தற்காப்பு, சட்டப்பாதுகாப்பு மற்றும் போலீஸ் அக்கா, போலீஸ் சகோதரன் திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலும், பெண்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதி செய்வதிலும், கல்வி நிறுவனங்களின் முக்கியப்பங்கு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
25-Sep-2025