பாரதியார் பல்கலையில் விழிப்புணர்வு நிகழ்வு
கோவை; பாரதியார் பல்கலை வேலை வழிகாட்டல் துறை சார்பில், முதலாமாண்டு முதுநிலை, இளநிலை மாணவர்களுக்கு இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. போக்சோ சட்டம், உதவித்தொகை பயன்பாடு, கல்விக்கடன், வேலைவாய்ப்பு, அரசு தேர்வுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 800க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பவன்குமார், பல்கலை பதிவாளர் ராஜவேல், வழிகாட்டல் துறை தலைவர் விமலா, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையத்தின் துணை இயக்குனர் கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.