உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெருநாய்களை காக்க விழிப்புணர்வு ஊர்வலம்

தெருநாய்களை காக்க விழிப்புணர்வு ஊர்வலம்

கோவை: பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸில் விழிப்புணர்பு ஊர்வலம் நடந்தது. தெருநாய்களுக்கும் மனிதர்களுக்கும் நலம் பயக்கும் வகையில், நிலையான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. விலங்குகள் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோசபின் செலினா கூறுகையில்,''மக்கள், நாய்கள் சுமூகமாக இருக்கும் வகையில் நிலையான தீர்வை கொண்டு வர முடியும். அரசு அதுகுறித்து யோசிக்க வேண்டும். எங்களால் முடிந்தவரை பல விஷயங்களை மேற்கொள்கிறோம். தெருநாய்களை காப்பாற்ற மாநில அரசு தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும். நாய்களுக்கு உணவு கிடைக்காமல் மனது பாதிக்கப்பட்டு, பயத்தில் மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன. ஒவ்வொரு கைவிடப்பட்ட நாய்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றன. அதை தடுக்க வேண்டும்,'' என்றார். ஊர்வலத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள், தெருநாய்களுக்கு தேவையான தீர்வு வழங்குவது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை