போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள 144 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது, குறித்து, விழிப்புணர்வு கூட்டம், பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், குழந்தைகளிடம் குட் டச், பேட் டச் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, போக்சோ சட்டம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகள், மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் போன்றவைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.