விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில், தொழிலாளர்களுக்கு இ.பி.எப்.ஓ., புதிய திட்டங்கள் குறித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பி.எப்., கோவை மண்டல கமிஷனர் விகாஸ் ஆனந்த் பேசுகையில், நிறுவனங்கள் சட்ட விதிகளை பின்பற்றுவதை எளிதாக்கியுள்ளோம். தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளோம். தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் தகுதிக்கேற்ப, நிறுவனங்கள் ஊதிய நிர்வாக நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இத்திட்டத்தை எச்.ஆர். பிரிவினர் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பி.எப்., அதிகாரிகள், தொழில்துறையினர், வங்கிபிரதிநிதிகள் பங்கேற்றனர்.