மேலும் செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
27-Oct-2024
கோவை ; மலுமிச்சம்பட்டியில் உள்ள சம்ஹிதா அகாடமி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை களை அறியவும், அதனை முற்றிலும் ஒழிக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மலுமிச்சம்பட்டி பிரதான சாலையில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பேரணியின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி மாணவர்கள் பேசினர். இதில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பை முதலில் வீடுகளில் இருந்து துவங்கவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
27-Oct-2024