விழிப்புணர்வு
கோவை; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் வெங்கடேஷ், தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.