மேலும் செய்திகள்
சூர்யா கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்.
08-Apr-2026
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் சங்கம் சார்பில், 12வது தேசிய அளவிலான தொழில்நுட்ப சிம்போசியம் நடந்தது. பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். முதல்வர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கோவை 'டூ மோர் டெக்' நிறுவனர் முனைவர் சோமசுந்தரம் பாலசுப்ரமணியம், மாணவர்களின் பொறியியல் பயிற்சி மற்றும் மாணவர்கள் பெற வேண்டிய தொழில்நுட்ப திறன்கள் குறித்து விளக்கினார். பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் சங்க துணை செயலாளர் சாய் நன்றி கூறினார்.
08-Apr-2026