உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் யானை பலி தவிக்கும் குட்டி யானை

பெண் யானை பலி தவிக்கும் குட்டி யானை

பெ.நா.பாளையம்:கோவை வனச்சரகம் பன்னிமடை தடாகம் வனப்பகுதியில், யானை குட்டி ஒன்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், யானை குட்டியை பத்திரமாக மீட்டு கண்காணித்து வருகின்றனர்.அப்போது, 1 கி.மீ., தொலைவில் தனியார் தோட்டத்தில் பெண் யானை இறந்து கிடந்தது. இந்த யானை, தனிமைப்படுத்தப்பட்ட குட்டி யானையின் தாயா அல்லது பிற யானை கூட்டத்தில் இருந்து வழிதவறி வந்ததா என, வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். இறந்த யானையின் உடல், பரிசோதனைக்கு பின் வரப்பாளையம் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'யானை இறப்புக்கான காரணம், பரிசோதனை முடிவு முழுமையாக வந்த பிறகே தெரியவரும். பிற யானையின் தாக்குதல், மாரடைப்பு அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். 'யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !