உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலத்தில் தடை நீக்கம்

கோவை குற்றாலத்தில் தடை நீக்கம்

தொண்டாமுத்தூர்; போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த, சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த 23ம் தேதி முதல், கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து சீரானதால், இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ