உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை: விவசாயிகள் ஏமாற்றம்

வாழைத்தார் விலை: விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - அன்னுார் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. ஞாயிறன்று நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அன்னுார், பவானிசாகர் ஆகிய பகுதிகளில், 2,600 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். குறைவான வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்த போதும், விலையில் உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஞாயிறு நடந்த ஏலத்தில் நேந்திரன் குறைந்தபட்சம், 15க்கும், அதிகபட்சம், 35 ரூபாய்க்கு, கதளி குறைந்தபட்சம், 10 க்கும் அதிகபட்சம், 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு தார் குறைந்தபட்சம், 50, அதிகபட்சம், 850 ரூபாய்க்கும், ரஸ்தாலி குறைந்த பட்சம், 175, அதிகபட்சம், 775க்கும், தேன் வாழை குறைந்த பட்சம், 200க்கும், அதிகபட்சம், 900க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 100, அதிகபட்சம், 900 ரூபாய்க்கும், ரோபஸ்டா குறைந்த பட்சம், 100, அதிகபட்சம், 850 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதுகுறித்து வாழைத்தார் ஏலம் மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்ராஜ் ஆகியோர் கூறுகையில், 'வாழைத்தார்களின் விலையில் உயர்வு ஏதும் இல்லை. தற்போது மழை பெய்து வருவதால், மக்களிடையே பழங்களின் தேவை குறைந்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது. அடுத்த மாதம் விலை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை