உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை உயர்வு; செவ்வாழை கிலோ ரூ.62

வாழைத்தார் விலை உயர்வு; செவ்வாழை கிலோ ரூ.62

பொள்ளாச்சி; பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரம்தோறும் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. கோபி, உடுமலை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்கள்; ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, நஞ்சேகவுண்டன்புதுார், சிங்காநல்லுார், தொப்பம்பட்டி போன்ற பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். விசேஷ நாட்களில், பழங்களின் தேவை அதிகம் உள்ளதால், விலை உயர்ந்து காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில், காந்தி மார்க்கெட்டில் வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்துள்ளது. பூவன்பழம் கிலோ - 40 ரூபாய், கற்பூர வள்ளி -- 38, செவ்வாழை --- 62, மோரிஸ் -- -33, நேந்திரன் - -43, கதளி -- 65, ரஸ்தாலி -- 45 ரூபாய்க்கும் ஏலம் போனது. வியாபாரிகள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. தேவை அதிகமாக உள்ளதால் புதன்கிழமை விற்பனை, விறுவிறுப்பாக இருப்பதுடன், விலையும் உயர்ந்து காணப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி