உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்கு வாழைகள் சேதம் உரிய இழப்பீடு வேண்டும்

மழைக்கு வாழைகள் சேதம் உரிய இழப்பீடு வேண்டும்

தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து சேதமடைந்துள்ளன.பெரும்பாலான இடங்களில், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், காற்றில் முறிந்து விழுந்தன. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கூறுகையில், கனமழை காரணமாக, குமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ