உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடை செய்யப்பட்ட மரங்கள் உத்தரவுக்கு பின்பும் அசட்டை

தடை செய்யப்பட்ட மரங்கள் உத்தரவுக்கு பின்பும் அசட்டை

கோவில்பாளையம்: பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுறுத்தியும், தடை செய்யப்பட்ட மரங்கள் அகற்றப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், கவுசிகா நதியின் மேற்குப் பகுதியில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட, கோனோ கார்பஸ் மரங்கள் 104 நடப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என, கரியாம்பாளையம் உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி, முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பினார். தனிப்பிரிவின் உத்தரவின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு அனுப்பிய உத்தரவில், கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் 104 கோனோ கார்பஸ் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பித்து, இரு மாதங்கள் ஆகியும், 50 சதவீத மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. ‘அப்பகுதியில் பாதிப்பு ஏற்படும்’ என, புகார்தாரர் ரங்கசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை