மனைவியை தவறாக பேசிய நண்பனுக்கு அடி
கோவை; மனைவியை தவறாக பேசிய நண்பருக்கு, அடி, உதை விழுந்தது. கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாசிர் ஹுசைன், 37. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்முரளி, 49. இருவரும் நேற்று முன்தினம், செட்டி வீதியில் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நாசிர் ஹுசைன், சுரேஷ்முரளியின் மனைவி குறித்து தவறாக பேசினார். கோபமடைந்த சுரேஷ்முரளி, நாசிர் ஹுசைனை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில் நாசிர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து நாசிர்ஹுசைன், செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், விசாரிக்கின்றனர்.