உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவிக்கு அடி கணவனுக்கு சிறை

மனைவிக்கு அடி கணவனுக்கு சிறை

தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில், மனைவியை அடித்து கொடுமை செய்த கணவனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தீத்திபாளையம், மகேஸ்வரன் வீதியை சேர்ந்தவர் கலைச்செல்வன், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா; தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கலைச்செல்வன், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வாரம் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு, மது அருந்தி வந்த கலைச்செல்வன், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பொறுக்க முடியாத மனைவி சந்தியா, பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கலைச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை