உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிசியா நிர்வாகிக்கு சிறந்த இளைஞர் விருது

அடிசியா நிர்வாகிக்கு சிறந்த இளைஞர் விருது

கோவை: ஜே.சி.ஐ., கோவை இண்சிட்டி சார்பில், நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் தொழில்முனைவோரின் மிகப்பெரிய சந்திப்பு நிகழ்வாக, 'ஜோன்கான் 2025' மாநாடு அவிநாசி ரோடு, எம்.என்.சி.ஆர்., மஹாலில் நடந்தது. இதில், கே.சி.ஐ., அமைப்பின் மிக உயரிய சிறந்த இளைஞர் விருது, அடிசியா பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டது. அவர், தன் தொழில்முனைவு பயணத்தையும், வெற்றி அனுபவங்களையும் பகிர்ந்து ஊக்க மளித்தார். மாநாட்டில் மண்டலத் தலைவர் ஜே.எப்.எஸ்., கவுசிக் மற்றும் மாநாட்டு இயக்குனர் ஜே.எப்.எம்., ஆனந்தகிருஷ்ணன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை