உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை கோ-கோ வி.எல்.பி., கல்லுாரி முதலிடம்

பாரதியார் பல்கலை கோ-கோ வி.எல்.பி., கல்லுாரி முதலிடம்

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான, கோ-கோ போட்டியில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லுாரி, முதல் பரிசை தட்டியது. பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில், கடந்த இரு நாட்கள் நடந்தது. 11 கல்லுாரி அணிகள் பதிவு செய்திருந்த நிலையில், ஐந்து அணிகள் கலந்து கொண்டன.இதில், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, முதல் பரிசை தட்டியது. இரண்டாம் பரிசை ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியும், மூன்றாம் பரிசை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், நான்காம் பரிசை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ