உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை

சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில், 77.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.எம்.பி., பேசுகையில், 'ஊராட்சி மக்கள் நலன் கருதி சமூக கூடம் கட்ட ஏற்பாடு செய்துள்ளார். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் குளத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ