உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி; பா.ஜ.-அ.தி.மு.க. கொண்டாட்டம்

 பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி; பா.ஜ.-அ.தி.மு.க. கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை, பொள்ளாச்சியில் பா.ஜ. - அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பா.ஜ. - அ.தி.மு.க.வினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.நகர தலைவர் கோகுல்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வக்குமார், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பாலு மற்றும் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வால்பாறை பா.ஜ., சார்பில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட, மாநில, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ