உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாத் பண்டிகை கொண்டாட பீஹார் தொழிலாளர் பயணம்

சாத் பண்டிகை கொண்டாட பீஹார் தொழிலாளர் பயணம்

திருப்பூர்: 'சாத்' பண்டிகை கொண்டாட்டத்துக்காக, திருப்பூரில் பணியாற்றி வரும் பீஹார் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர். சட்டசபை தேர்தல், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், திருப்பூர் திரும்ப திட்டமிட்டுள்ளனர். பின்னலாடை நகரான திருப்பூரில், 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்களுக்கு இவர்கள் செல்வது வழக்கம். பீஹாரில், சூரியக் கடவுளைப் போற்றும் 'சாத்' பண்டிகை பிரபலமானது. இந்தாண்டு, வரும் 27, 28 ஆகிய தேதிகளில், கொண்டாடப்படுகிறது. இதற்காக, திருப்பூரிலிருந்து, தங்கள் மாநிலத்துக்கு பீஹார் தொழிலாளர்கள் செல்கின்றனர். பீஹார் தொழிலாளர்கள் கூறுகையில், ''தீபாவளி போனஸ் வாங்கிய கையுடன், சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டு விட்டோம். ''பீஹார் சட்டசபை தேர்தல் வரும் நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, 14ல் நடைபெறும்; தேர்தல் முடிந்து வெற்றி கொண்டாட்டத்தைப் பார்த்த பிறகு தான் திருப்பூர் திரும்புவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ