உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

வால்பாறை, ; ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி உள்ளிட்ட எட்டு வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வால்பாறையில், யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ள நிலையில், பறவையினங்களும் அதிகம் காணப்படுகின்றன.புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என கண்டறியும் வகையில் ஆண்டு தோறும், இரண்டு முறை குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது தவிர பறவைகளின் கணக்கெடுப்பு பணியும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக, காடம்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ், சின்னக்கல்லார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில், பறவைஆர்வலர்கள், வனஆர்வலர்கள், வனவர்கள், வனக்காவலர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, நிலவாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.கணக்கெடுப்பின் போது, மைனா, மரம் கொத்தி, இருவாச்சி, சிட்டுக்குருவி, கொண்டை வளர்த்தான் குருவி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள், யானைகள், காட்டுமாடுகள் கண்டறியப்பட்டன. இதில், பறவைகள் குறித்து மொபைல்ஆப் வாயிலாக விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை